65. பூசலார் நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 65
இறைவன்: இருதயாலீஸ்வரர்
இறைவி : மரகதாம்பிகை
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : திருநின்றவூர்
முக்தி தலம் : திருநின்றவூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஐப்பசி - அனுஷம்
வரலாறு : தொண்டை நாட்டில் திருநின்றவூரில் அவதாரம் செய்தார். சிவ சிந்தனையாகவே எப்போதும் இருப்பார். சிவனுக்குக் கோயில் கட்ட எண்ணினார். ஆனால் போதிய நிதி வசதி இன்மையால் மனதிலேயே கோயில் கட்ட ஆரம்பித்தார். மனதிலேயே மதில்கள் கோபுரங்கள், கருவறை மூர்த்திகள் போன்றவற்றை நிறுவினார். கும்பாபிஷேகத்திற்கும் நாள் குறித்தார். அச்சமயத்தில் காஞ்சிபுரத்தை ஆண்ட காடவ மன்னன் ஒரு பெரிய கோயிலைக் கட்டினான். கும்பாபிஷேகத்திற்கு இவன் குறித்த நாளும் நாயனார் குறித்த நாளும் ஒரே நாள். எனவே இறைவன் மன்னனது கனவில் தோன்றிப் பூசலார் அதே நாளில் கும்பாபிஷேகம் வைத்துள்ளார். நீ வேறு ஒரு நாள் குறித்துக்க்கொள் என்றார். விழித்தெழுந்த மன்னன் பூசலார் கட்டிய கோயிலைக் காணும் ஆவலால் அங்கு சென்றான். அங்கு கோயில் ஏதும் இல்லாததைக் கண்டு அங்குள்ளோரை வினவ பூசலார் வீட்டினைக் காட்டினர். அங்கு சென்ற பிறகுதான் அவர் மனத்தில் கோயில் கட்டியுள்ளார் என்பதை அறிந்து அவரது பக்தியின் திறத்தை வியந்தான்.
முகவரி : அருள்மிகு. பூசலார் திருக்கோயில், திருநின்றவூர்– ? சென்னை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : ?

இருப்பிட வரைபடம்


அடுப்பது சிவன்பால் அன்பர்க் காம்பணி செய்தல் என்றே
கொடுப்பதெவ் வகையுந் தேடி அவர்கொளக் கொடுத்துக் கங்கை
மடுப்பொதி வேணி ஐயர் மகிழ்ந்துறை வதற்கோர் கோயில்
எடுப்பது மனத்துக் கொண்டார் இருநிதி இன்மை யெண்ணார்.

- பெ.பு. 4179
பாடல் கேளுங்கள்
 அடுப்பது


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க